நீந்திப் பழகு

நீந்திப் பழகு..!

தாளாத -
மோகத் தீ
தாகத்தை...
முத்தத்தேன்
தீர்த்தத்தில்...
தேகத்தை
முக்கியெடுக்கின்ற
போகத்தை...
'தெய்வம் என்றுணர்'.

'நான்'யென்ற
காரிருளின்
கைப்பாவையாகி...
அரக்க மனம்
உரக்கப் பேசும்
சினத்தின் தீயே...
'அச்சம் தவிர்'.

உயிர் -
உண்ணவாழும்
உயிர்க்குதவ...
உன்னைத் தரும்
உயர் ஞானம் பெற...
எவ்விடர்வரினும்
'தவத்தினை நிதம் புரி'.

எழுதியவர் : இராக. உதயசூரியன். (8-Nov-15, 10:15 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 57

மேலே