நிஜத்தை விடவும்...

அவள் கனவை-
நான் கண்டேன்
என் கனவை-
அவள் கண்டாள்,

இருவரும் இணைந்தொரு-
கனவு கண்டோம்.

எங்கள் கனவை,
எவரும் காண விரும்பவில்லை.

கனவாய் போகும் வாழ்வில்...
நிஜத்தின் நிதர்சனம் நிச்சயமற்ற போது-

மீண்டும்... மீண்டும்...
தொடரும் எங்கள் கனவு...
நிஜத்தை விடவும்,
நிஜமானது.

எழுதியவர் : ரமண பாரதி (7-Jun-11, 8:42 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 363

மேலே