உது என்ற வார்த்தை

சிறு தகவல்.........

முகநூலில் ஒரு இலங்கை தமிழர் உது என்ற வார்தையை பயன்படுத்துவதை காண நேர்ந்தது

''உது'' என்ற தமிழ் வார்த்தை தமிழ் நாட்டில் முற்றிலும் வழக்கொழிந்து விட்டது, ஆனால் இலங்கையில் இன்னும் வழக்கில் இருக்கிறது.....

''அ,இ,உ'' என்பது சுட்டெழுத்து....

தூரத்தில் இருக்கும் பொருளை சுட்டி காட்ட ''அது '' என்போம்.

பக்கத்தில் இருக்கும் பொருளை சுட்டிகாட்ட ''இது'' என்போம்.

இடைப்பட்ட தூரத்தில் உள்ள பொருளை சுட்டிகாட்டவே ''உது'' என்ற வார்த்தை பயன்படும்.

எழுதியவர் : செல்வமணி (9-Nov-15, 1:34 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : uthu entra vaarthai
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே