இப்போது செல்ஃப் சரியாகியிருக்குமே

32. இப்போது செல்ஃப் சரியாகியிருக்குமே?


எத்தன்முறை காந்திஜி இந்தியா முழுவதும் சுற்றினார் என்று தெரியாது. ஒரு சமயம் ஹரிஜன நிதிக்குப் பொருள் சேர்ப்பதற்காக தேராடூன் வந்து கொண்டிருந்தார். அங்கு பிரம்மச்சாரி என்ற பெயருள்ள டிரைவர் ஒருவர் இருந்தார். மிகப் பழைய ‘டாக்ஸி’ ஒன்றை அவர் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். ”மகாத்மா காந்தியை என் டாக்ஸியில் அமர வையுங்கள்” என்று மகாவீர் தியாகியிடம் அவர் கூறினார்.

ஆனால் மகாவீர் தியாகி ஒத்துக்கொள்ளவில்லை. பிரம்மச்சாரி நேராகவே காந்திஜிக்கு கடிதம் எழுதிவிட்டார். அவர் முன்பு ஒரு தடவை காந்திஜி ஆசிரமத்தில் தங்கியிருந்தார்; அந்தப் பழக்கம் தான். அவருடைய வண்டியில் தான் உட்காருவதாக அடிகளிடமிருந்து பதிலும் வந்துவிட்டது.

காந்திஜியை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தனர். ‘சிக்னலும’ கீழே இறங்கியது. வண்டி பிளாட்பாரத்திற்கு வந்து நின்றதும், பீ…..பீ…… என்ற சத்தத்துடன் ஃபோர்டு கார் ஒன்றை பிம்மச்சாரி ஓட்டிக்கொண்டு காந்தியடிகளின் பெட்டிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார். வண்டி ஒரே கதர் மயமாக இருந்தது; வெண்ணிற கதர் துணியைப் போர்த்தியிருந்தார் வண்டியின்மீது.

ஊர்வலம் நகர் பக்கமாகச் சென்றது. தியாகிஜி யார் யாருக்கு என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாரோ தெரியாது. முதலில் ரயிலடியிலேயே சுமை கூலிகள் 51 ரூபாய் பணமுடிப்பைக் காந்திஜியிடம் அளித்தனர். பின் குதிரை வண்டிக்கார்ர்கள் 100 ரூபாய் பண முடிப்பு அளித்தனர். காந்திஜி மிக்க மகிழ்ச்சியடைந்தார். ‘நீ கொடுப்பதாக வாக்களித்த அந்த ஆயிரத்து ஐநூறு ரூபாயில் சேர்க்கப்பட மாட்டது. ஏனென்றால் டேராடூன் இன்னும் வரவில்லை. இப்போது நாம் இருப்பதோ கிழக்கிந்திய ரயில்வேயில் என்று மகாவீர் தியாகியிடம் காந்திஜி சொன்னார்.

இவ்வாறு சிரித்தும் சிரிக்க வைத்த்உக் கொண்டும் பண முடிப்புகளைப் பெற்றுகொண்டும் பண முடிப்பகளைப் பெற்றுக்கொண்டே, நகரத்தை நோக்கிச் சென்றார் திறந்த கார், இருமருங்களிலும் ஜனத்திரள். கடைத் தெருவிலுள்ள லாலாமித்ரசேன் என்பவர் காந்திஜியின் வண்டி இரண்டு நிமிடங்கள் தன் கடைக்கு முன் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஐநூறு ரூபாய் பணமுடிப்புக் கொடுக்க வாக்களித்திருந்தார்.

உத்திரப் பிரதேச யத்திரைக்காக ஆச்சாரிய கிருபாளனி ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அவர் நிபந்தனையை ஒத்துக் கொள்ளவில்லை.

மகாத்மாஜி இதைப்பற்றிக் கேள்விப்பட்ட போது சிரித்தார், ஆனால் அந்தக் கடைக்கு முன்னால் வந்ததோ இல்லையோ, வண்டி நின்றுவிட்டது. ‘என்ன ஆனது’ என வினவினார் காந்திஜி.

‘ஒன்றுமில்லை சிறிது பெட்ரோல் அடைத்துவிட்டது’ என்று விடையளித்தார் டிரைவர் பிரம்மச்சாரி. இதைச்சொல்லி விட்ட டிரைவர் கீழே இறங்கி சர்…பர்…. என்ற சப்த்த்தை உண்டாக்கினார். அவ்வமயம் லாலாமித்ரசேன் மா விளக்கு பொருத்திக்கொண்டிருந்தார். காந்திஜி ‘அடே, செலஃப் போட்டு ஓட்டுவது தானே’ என்றார்.

‘ஐயா! ‘செல்ஃப் கூடச் சரியாக இல்லாதிருக்கிறது’ என்றார் பிரம்மச்சாரி.

இதைப்பார்த்துக் கிருபளானிக்குக்கோபம் தாங்கவில்லை. மாவிளக்குப் பொருத்தம் வேலை முடிந்ததும் லாலா தட்டுடன் வெளியே வந்து 500 ரூபாய் பணமுடிப்பு ஒன்றைக் காந்திஜியிடம் சமர்ப்பித்தரா. சிரித்துக்கொண்டே காந்திஜி பிரம்மச்சாரியிடம், ‘இப்பொழுது ‘செல்ஃப் சரியாகியிருக்குமே’ என்றார்.

பிரம்மச்சாரி இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்; உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். ‘பா’ வும் பாபூவும் இதைப் பார்த்து விழுந்து-விழுந்து சிரித்தனர். கிருபாளனிக்கும் கடுகடுப்பு மாறி மகிழ்ச்சியேற்பட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, என் செய்வது, உ.பி.குண்டர்களின் நடுவில் சிக்கிக் கொண்டுவிட்டோம்!’ என்றார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:47 pm)
பார்வை : 78

மேலே