கங்கோத்திரி அசுத்தமானால்……

33. கங்கோத்திரி அசுத்தமானால்…….


அக்வால் பஞ்சாயத்து ஜம்னாலால் பஜாஜை ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் சமைத்ததை அவர் சாப்பிட்டார் என்பதுதான் அவர் செய்த பெரிய குற்றம். இருந்தாலும் அவருக்கென்று தனிக்கூட்டம் இருந்தது. அவர்கள் அவரை விட்டுவிட விரும்பவில்லை. அக்கூட்டத்தினர் சிலர் ஒரு நாள் ஜம்னாலால்ஜியிடம் வந்து ‘நீங்கள் எங்களுக்காகவாவது’ கட்டாயம் ஒன்று செய்ய வேண்டும். வேறு எதைச் செய்தபோதிலும் இனிமேல் தீண்டத்தகாதவரிகளிடம் சாப்பிடுவதில்லை என்று உறுதி சொல்லுங்கள். இது எங்களுடைய திருப்திக்காகவாவது இருக்கட்டும். தீண்டாதவர்களிடம் சாப்பிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிப்பீர்களா? என்று கேட்டனர்.

ஜம்னாலால்ஜி, ”ஆசிரமத்தில் எல்லா ஜாதியினரும் இருக்கின்றனர். நான் ஆசிரமத்தில் சாப்பிட மறுக்கலாமா?’

”ஆசிரமத்தைப் பற்றி யார் கூறுகிறார்கள்? அதுதான் புனித பூமி ஆயிற்றே. தீர்த்த ஸ்தலத்திற்கு யாராவது தடை சொல்வார்களா? மற்ற இடங்களில் மட்டும் இதைச் செய்யாதீர்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள் ” என்றனர் வந்த கூட்டத்தினர்.

ஆனால் இந்த வேண்டுகோளை மட்டும் ஜம்னாலால் எப்படி ஒத்துக்கொள்வார்? கடைசியில் அப்பெருமக்கள் காந்திஜியிடம் சென்று முறையிட்டனர். அடிகள் கேட்ட கேள்வி இதுதான் - ஜம்னாலால்ஜி தீண்டத்தகாதவர்களிடம் சாப்பிடுகிறார். இதனால் நீங்கள் பயப்படுவது பயப்படுவது சமூகத்திற்காகவா அல்லது மதத்திற்காகவா?

”மத்த்தைப்பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? சமூகத்தின் பழக்கவழக்கம் இப்படி செய்யக்கூடாது என்று இருக்கிறது. நாங்கள் ஜம்னாலால்ஜி சொல்வதெல்லாம் கேட்கிறோம் எங்களுடைய அச்சிறு வேண்டுகோளை மட்டும் அவர் ஏன் நிராகரிக்க வேண்டும்” கூட்டத்தினரில் வயோதிகர் இப்படி பதிலளித்தார்.

பழக்க வழக்கம் சரியில்லையென்றால் அதை ஒழித்தே ஆகவேண்டும். யார் குடிகாரன் இல்லையோ, விபசாரம் செய்வதில்லையோ அவன் தன் கையில் சுத்தமாகச் செய்த சாப்பிடத்தக்க பொருட்களை நாம் சாப்பிடத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எவன் தூய்மையற்றவனோ, புலாலுண்பவனோ அல்லது குடிகாரனோ, அவன் கையால் செய்த்தைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களுக்குத்துணிவு இல்லையென்றால் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்; ஆனால் அவ்வாறு செய்பவரை பின்வாங்கச் சொல்வானேன்? தூய்மையில்லாதவர்கள் பிராமணனாக இருந்தாலும் சரி, அவர் கையால் சாப்பிடுவதில்லை என்ற உறதியை அவருடன் சேர்ந்து நீங்களும் ஏன் எடுக்கக்கூடாது?

நீங்களோ பஞ்சாயத்தாரின் ஆணைக்குப் பயப்படுகிறார்கள் ஆனால் கங்கை ஆறு தோன்றுமிடத்தில் கங்கோத்திரி அசுத்தமாகிவிட்டால் கங்கை நீர் தூய்மையாக இருக்குமா? இன்றைக்குப் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக இல்லை. இன்றைய பஞ்சாயத்து அரக்க வழிகளைப் பூசிப்பதாக இருக்கிறது. இவர்கள் ஏமாற்று வித்தைக்கார்களாகவும் தன்னலமுடையவர்களாகவும், கோபம், பொறாமை நிறைந்தவர்களாகவும், இருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களிடம் இருக்க வேண்டிய நடுநலைமை எங்கு போய்விட்டது? என்னுடைய எச்சரிக்கை என்னவென்றால் பஞ்சாயத்தார்களிடம் உள்ள தீமைகளை நாம் இப்போதே களைந்தெரிவில்லையென்றால் சமூகம் கெட்டே போகும். தர்மத்தைப் பற்றி பேச்சளவில் பெரிதாக மட்டும் பேசிவிட்டால் நியாயம் வந்துவிடுமா? பஞ்சாயத்தின் அடித்தளமே களங்கமடைந்துவிட்டது. அதைத் தூய்மைப்படுத்துவதற்கு நாம் எல்லோரும் தாயராக இருக்கவேண்டும். ஜம்னாலால்ஜீ இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். அவரை நீங்கள் வாழ்த்துங்கள். அவரிடம் அன்பு காட்டினால் மட்டும் போதும். அதே மாதிரி பஞ்சாயத்துக்கு எதிராக உள்ளவர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பால் கோபம் கொள்ளாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள். நாம் கொபத்தை அன்பினாலும் குழப்பத்தை அமைதியாலும் வெல்லுவோம். ஆகையால் அவர்களையும் நேசியுங்கள். தர்மத்த்ஐ காத்து அநியாயத்தை ஒழிப்பதில் தம் கடமையைச் சீராகச் செய்ய வேண்டுமென்று ஜம்னாலால்ஜியை வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள்’ - இவ்வாறு காந்திஜி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

காந்திஜி பேசி முடித்த பின் கூட்டத்தினரிடையேயும் அமைதி தாண்டவமாடியது. யாருக்கும் பதில் சொல்ல நா எழவில்லை, ஒன்றும் பேசாமல் பெரியவர் தம் தலைப்பாகையைக் கழற்றிக் காந்திஜியின் திருவடிகளின் முன் வைத்து வணங்கி ‘அண்ணலே தங்கள் அறிவுரை கேட்டு நாங்கள் அரியபேறு பெற்றுவிட்டோம்’ என்று கூறினார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:48 pm)
பார்வை : 70

மேலே