பஸ் டிரைவர்

ஒரு பாதிரியாரும் பஸ் டிரைவரும் இறந்து சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

சொர்கத்தின் வாயிற்காப்பாளன் பாதிரியாரை பார்த்து கேட்கிறார்.

சொர்கத்தின் வாயிற்காப்பாளன்: "நீங்க யாரு?"
பாதிரியார்: "நான்தான் எங்க நாட்டிலே பிரபல பாதிரியார். மக்களின் பாவங்களை கேட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவது, அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்குவது என் கடமை."

வாயிற்காப்பாளன் அவரிடம் ஒரு பருத்தியால் நெய்யப்பட்ட ஆடையை கொடுத்து, "ஓ அப்படியா? இந்தாங்க. உள்ள வாங்க" என்கிறார்.

அடுத்து பஸ் டிரைவர்.
வாயிற்காப்பாளன்: "நீங்க?"
பஸ் டிரைவர்: "நான் பஸ் டிரைவர்."

வாயிற்காப்பாளன் அவரிடம் தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடையை கொடுத்து உள்ளே அனுமதிக்கிறார்.

இதை கவனித்துக்கொண்டிருந்த பாதிரியார் கடுப்பாகி, "நான் தினமும் மக்களுக்கு நல்ல போதனைகள் வழங்கி அவங்களை நல்வழிப்படுத்துறேன். எனக்கு சாதாரண துணி, ஒரு சாதாரண பஸ் டிரைவருக்கு தங்கத்திலான துணியா?"

வாயிற்காப்பாளன் அவரிடம் அமைதியாக,

"உண்மை. ஆனா நீங்க பிரசங்கம் செய்யும் போது எல்லோரும் தூங்கிட்டு இருந்தாங்க. ஆனா இந்த டிரைவர் பஸ் ஓட்டும் பொது எல்லோரும் கடவுளை வேண்டிகிட்டு இருந்தாங்க."

எழுதியவர் : செல்வமணி (12-Nov-15, 9:16 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : bus DRIVER
பார்வை : 280

மேலே