மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் !
எங்கோ எவர் எவரோ இரு இலக்க, இருநூறு இலக்க கோடிகளில் தவறும் விதிகளில் தவறாது குவிக்கிறார்களாம் பணத்தை , பத்திரிகையும் தொலைக்காட்சியும் பரபரப்பாக வியாபாரமாக்குகிறது செய்திகளை ! நடிகர்களின் அரசியலும் , அரசியல்வாதிகளின் நடிப்புகளும் இடம் பிடிக்கிறது இடைப்பட்ட காலத்தில் ! மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ கற்றை கற்றையாக ஊழல் உருவப்படுகிறது கறை படியா@!? கரன்சிகளென வெள்ளையாக்கப்பட்டு ! அரசியல் தலைவர்களின் வெள்ளை நிற உடை மேலும் வெண்மையாகிறது பதவிகளில் ! வரவேற்பும் வானவில் வேடிக்கையும் வகை வகையான வாசகங்களுமாக தூய்மைப்படுத்தப்பட்டு பாதையெங்கும் பளீரிடுகிறது பாசமிகு தலைவர்களின் வாழ்க்கை ! அப்பாவி குடிகள் ஐந்து வருடத்திற்கு அசராது தன்னை சாசனம் எழுதி வைத்து விட்டு இலவசப் பொருட்களில் வெள்ளந்தியாய் மகிழ்கிறது! ஆட்காட்டி விரலில் மையெழுதி ஆசுவாசமாய் கருமையாக்கிக் கொள்கிறோம் வாழ்வை! ஆட்கள் மாறினாலும் ,ஆட்சி மாறினாலும் விரைந்து விலாவைக்காட்டி குத்து வாங்கிக் கொள்வது நாமே!
ஆனால் விதியா மீறலா என அறியாமல் தள்ளிப்போட்ட தண்ணீர் குழாயிலும் , இடித்துக் கொண்ட கிருஷ்ணாயில் வரிசையிலும் தாளொண்ணா குற்றமாகி தோற்றுப்போகிறோம் கடமை(@?!)தவறா சட்டத்திடம் ! குறுகிப்போன குடிகளிடம் நீதி நிலை நாட்டப்படுகிறது! மீண்டும் மீண்டும் மக்களாட்சியின் மகோன்னதம் பறை சாற்றப்படுகிறது எம்மின் இயலாமையிலும் !, எங்கள் இதயத் தலைவர்களின் தலைமையிலும்! வாழ்க எம் பாரதம்! வளர்க எம் இறையாண்மை!!
அகராதி
9952131176