வின் ஞானம்
மோன மாகசின் முத்திரை காட்டிடும்
குருவின் ஞானம்
மூச்சும் தரும்தனை முற்றுந் தருமே
தருவின் ஞானம்
போன போக்கில் புவியை உழுவது
புழுவின் ஞானம்
புல்லைத் தின்று பாலை கொடுப்பது
பசுவின் ஞானம்
ஆயிர மாயிரம் கண்டு பிடிப்புகள்
ஆய்வின் ஞானம்
அரசன் புத்தன் ஆன தெல்லாம்
அறிவின் ஞானம்
தூய உள்ளம் பெறுவது தானே
துறவின் ஞானம்
தொடரு கின்ற அனுபவம் தானே
வாழ்வின் ஞானம்