வின் ஞானம் - போட்டிக்கவிதை
அம்மா'வின் ஞானம்' அன்பை போதிக்க
அப்பா'வின் ஞானம்' அறிவை போதிக்க
அண்ணா'வின் ஞானம்' விளையாட்டைப் போதிக்க
அக்கா'வின் ஞானம்' பலபாட்டைப் போதிக்க
மாமா'வின் ஞானம்' உலகைப் போதிக்க
தாத்தா'வின் ஞானம்' உதவியை போதிக்க
காக்கா'வின் ஞானம்' உறவை போதிக்க
ரோஜா'வின் ஞானம்' நறுமணம் போதிக்க
இயேசு'வின் ஞானம்' மன்னிப்பை போதிக்க
அல்லா'வின் ஞானம்' சமாதானம் போதிக்க
கிருஷ்ணபரமாத்மா'வின் ஞானம்' தர்மத்தை போதிக்க
சித்தார்த்தா'வின் ஞானம்' ஆசைவிட போதிக்க
பாபா'வின் ஞானம்' பணிவை போதிக்க
அன்னைதெரசா'வின் ஞானம்' சகிப்புத்தன்மை போதிக்க
மகாத்மா'வின் ஞானம்' அஹிம்சை போதிக்க
பண்டித்நேரு'வின் ஞானம்' மழலையன்பை போதிக்க
பலஞானம் பெற்றிட்டோம் வளரும் வயதிலே
இருந்தும் ஞானமின்றே வாழுகின்றோம் இவ்வுலகிலே
எஞ்ஞானம் உயர்வென்று தேடுதல் விட்டு
இஞ்ஞானம் அனைத்தும் கற்று வழிநடப்போமே...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
