வானம் பாத்த பூமி
வானம் பாத்த பூமி விளையைலன்னா
வாங்கிய வங்கிக் கடனை
வாங்காமல் வங்கி விட்டிடுமா
குட்டிபோட்ட வட்டி நெட்டையாய் நிக்குமே
தாலித் தங்கத்தையும் கொடுத்துதான்
மீண்டு வரவேண்டும்
ஏய்த்தவன் என்று ஏளனம் செய்து
போட்டோ போட்டு பேரை
நாறடிப்பான் வங்கியன் !
இதில் என்ன தனி உடமை அரசுடமை ?
இந்தக் கொள்கையில் இவர்கள் பொதுவுடமை
ஏழையின் மானத்தை யார் காப்பார்
அந்த வானம்தான் காக்க வேண்டும் !
---கவின் சாரலன்