அரும்புகள்

அரும்புகள்

தளிருடல் மிளிரும், தளா் நடையும் ஒளிரும்
தழுதழுத்த குரலில், தரணியே குளிரும்…

குழவிப் பருவமோ, குழந்தைப் பருவமோ,
குணம் மட்டுமே பேசுமதில், மழலை மனம் வீசும்..

குடும்பங்களின் குருதியில், குறைகிறது அழுத்தம்
சிரிப்புகளும் சிலவேளை, யோகக்கலை நடத்தும்

பசுமரங்களதில் சமூகம் பரப்பும் உரங்கள்..
தழைரசமோ? ரசாயணமோ? அதைமட்டுமே எதிரொலிக்கும்…

அரும்புகள் கூட்டு சோ்ந்தால், அது தனியுலகம்-நாம்
கத்தினாலும் கற்காததை, கணத்தில் கற்று கற்பிப்பா் நமக்கும்…

அவனடித்தான், அவன் கிள்ளினான்… அழுகையில் ஒரு நடிப்பு
பொய்யும் இருக்குமெனினும் நம் மெய்யாவும் இனிக்கும்..

பூதேவியும் தாங்குவாள், இடறி விழுகையில்
கல்மனமும் கரையும், கதறி அழுகையில்…

பால்மனம் மாறாது பக்கத்தில் நடப்பது புரியாது
பக்குவம் கிடைக்காது, பத்தாண்டு கடந்தபின்
அதெல்லம் நிலைக்காது…

அரும்பிலேயே வறுமையெனில், அதுபோல் உரமில்லை
வளா்ந்தபின் அவனுயரம், வானவரும் அளந்தாரில்லை…

உணவினிது பொருளினிது என்பா் அரும்புகளின்
அருங் குறும்பு அறியாதவா்.

எழுதியவர் : காட்டூா் பிரபாகரன் (16-Nov-15, 4:51 pm)
சேர்த்தது : கா பிரபாகரன்
பார்வை : 433

மேலே