மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
(படைப்பு - நாகசுந்தரம் user : nksonline )
மீண்டும் மீண்டும் எழு
எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழு
காலை தடுக்கி விட காத்திருப்போர் பலருண்டு
கால் தடுக்கி விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழு
நீ ஒவ்வொரு முறை விழும்போதும்
மீண்டும் மீண்டும்
தாங்குகிறாள் பூமித்தாய் உன்னை.
பாதாளத்தில் அமுக்கினாலும்
மீண்டும் மீண்டும் எழு
அன்று பகீரதன் கங்கைக்காக
மீண்டும் மீண்டும் செய்தான் முயற்சி
அவனைப்போல் எத்தனை தடை வந்தாலும்
மீண்டும் மீண்டும் எழு
ஆண்டு பல செல்கிறது வியர்த்தமாய்
போன காலம் மீண்டும் வராது என்பார்
ஆனாலும் நீ மீண்டு எழுந்தால்
காலமும் உன் கைவசப்படும்.
எனவே
மீண்டும் மீண்டும் எழு