உந்தன் நினைவோடு எந்தன் ரயில் பயணம்

அமர்ந்த இடத்திலேயே இக்கணம்
அனைத்தையும் கடந்து செல்கிறேன்
இரயில் பயணத்தில்........

ஜன்னலோர இருக்கையில்
எட்டிப் பார்க்கிறேன் என்னை
எட்டிப் பார்ப்பதாய்
உந்தன் மீதான
எந்தன் நினைவலைகள்......

தூரத் தெரியும் மலர்களும்
என்னைக் கடந்து செல்கின்றன
புன்னகையோடு உன் முகம்
எனக்கு விடை கொடுத்தார் போல.......

அதோ !......
வரும் வயல்வெளியில்
தேங்கி நிற்கும் நீரோடையில்
தெளிந்த முகமாய் உன்னுருவம்
கடந்து செல்கிறேன் கானல் நீர் போல......

இதோ !!.....
இருப்புப் பாதைக்கு
அப்பால் தாற்சாலை -அதை
குறுக்கிட்ட பேருந்து
கடந்து செல்கையில்
எந்தன் இதயத்தில் ஓர்
இனம் புரியா துடிதுடிப்பு
என்னவள் நீ
அப்பேருந்தில் பயணிப்பதாய்.........

மித வேகத்தில்
நகரைக் கடந்த இரயில்
மின்னல் வேகத்தில்
புறநகர் கடக்கிறது.......

வெட்ட வெளியை
வெறித்தவாறு கடந்து செல்கிறேன் –நீ
என்னை பாலைவனத்தில்
பரிதவிக்க விட்டுச் சென்றதாய்.....

உந்தன் நினைவலைகளால் கட்டுண்ட
எந்தன் குரல்வளையில் ஓர் அதிசயம்
உன்னை எண்ணும்போதே பெருக்கெடுக்கும்
எந்தன் உமிழ்நீரின் எச்சம்.......

காகத்தின் கூட்டிலிருந்து
குயிலொன்று எட்டிப் பார்ப்பதாய்
ஜன்னலோர இடைவெளியில்
குனிந்த வண்ணம் என் சிரம்.....

உமிழ் நீர் எச்சம் தெரிக்க
சிரம் குனிந்தவன் ஒரு கணம்
அதிர்ந்து போகிறேன் இணையாச் செல்லும்
அவ்விரு தண்டவாளம் கண்டு
இறுதி வரை நீயும் நானும் அவ்வாரோ என்று.....

இதயம் இடிந்து போகிறது !........
சிந்தனை செயலற்றுப் போகிறது !!...........
எண்ணங்கள் இறுக்கம் கொள்கிறது !!!.......

சிரம் துண்டிக்கப் படப்போவதாய்
மறு கணமே உள்ளிழுத்துக் கொள்கிறேன்
உந்தன் நினைவுகளை பற்றியவாறே
எவ்வாறு உந்தன் கரம் பற்றுவேன்
எனும் சிந்தையில் நிந்தையோடு..........

ரணமான இதயத்திற்க்கு
ஓர் அதிசயம் இக்கணம் -என்
இருக்கைக்கு முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் நீ.........

பலநாள் பறிகொடுத்த
பாலகனைக் கண்ட தாயாய்
எந்தன் விழிகள் உந்தன்
முகம் விலக்க மறுக்கிறது.......

குத்தவச்ச எந்தன் கரத்தின் மேல்
தலைசாய்த்து என் பார்வைதனில்
உன்னை மட்டுமே காண்கிறேன்
இந்த இரயில் பயணத்தில்........

ஓரப் பார்வைக்கு வித்திடும்
உன் கருவிழிகள் -அதற்கு
ஒத்திகைப் பார்க்கும்
அதன் வெண்மணிகள்......

மயில் இறகாய் உன்னாடை
என்னைத் தீண்டிவிட
தடை போடுகிறாய் காற்றுக்கு
இவனை பரிசிக்க கூடாதென.........


ஏறு நெற்றி கொண்டு
புருவம் தன்னை உயர்த்தி
என்னவென்று கேட்கிறாயோ
இவன் உன்னையே வெறித்துப் பார்ப்பதால்......

ஆம்....

ஐந்து ஜாம பயணத்தில்
ஐந்து நொடிகள் கூட
வீணடிக்கப் படவில்லை
உந்தன் அசைவுகளை
பதிவேற்றம் கொள்ளும்
எந்தன் விழிகளால்......

என்ன முடிவெடுத்தாய் –நான்
எதிபாரா வண்ணம்
என் கரம் பற்றுகிறாய்.......

தரதரவென இழுத்துச் சென்றாலும்
பிரம்மை பிடித்தவனாய் பின் தொடர்கிறேன்.......

இரயில் நிலையம் வந்ததால்
இங்கு இரயிலை விட்டு
என்னை இறக்கி விட்டு –போதா
குறையாய் கன்னத்தில்
அரை ஒன்று கொடுத்த போது
சுய நினைவுக்கு வந்தவனாய்
வெட்கி தலை குணிந்தேன்
முதியவளின் முகத்தை உந்தன்
முகம் மறைத்ததை உணர்ந்தபோது........

என்செய்வேன் என்னுயிரே –நீ
என் அருகில் இருந்தாலும்
என் அருகாமையில் இருந்தாலும்
என்னுள் இருப்பது நீயல்லவா ????!!!!!!!...........

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (16-Nov-15, 5:02 pm)
பார்வை : 284

மேலே