மகிழ்ச்சியின் முயற்சி - முயல்வோம் மகிழ்வோம்

கஜினியின் முயற்சி
இந்தியாவின் மணலைப்பிடித்தது
ரஜினியின் முயற்சி
இந்தியர்கள் மனதைப்பிடித்தது

தமிழர் அகத்தைப் பிடித்து
தமிழகத்தைப் பிடித்தது
எம் ஜி ஆரின் முயற்சி
புது வைரமாய்ப் பிறந்து
புதுவையைப் பிடித்தது
என் ஆரின் முயற்சி

இந்தியத் தலைநகரைப்
பிடித்தது சாமான்யன்
தீயானதன் முயற்சி
இந்தியாவையே பிடித்தது
சாதாரன டீ விற்றவரின் முயற்சி

மகிழ்ச்சியின் விதை
முயற்சி

சிற்பியின் முயற்சி
சிலையாகிறது
சிலந்தியின் முயற்சி
வலையாகிறது

சீற்றங்களின் முயற்சி
அலையாகிறது
சிந்தனையின் முயற்சி
கலையாகிறது

கற்களின் முயற்சி
மலையாகிறது
பூக்களின் முயற்சி
மாலையாகிறது

சிலை , வலை ,அலை ,கலை
அனைத்தும் முயற்சியின் பரிணாமங்களே

அரும்புகளின் முயற்சி
காட்டில் பூக்கள் நிறைகிறது
எறும்புகளின் முயற்சி
வீட்டில் இனிப்புகள் குறைகிறது

வேள்வியின் முயற்சி
தோல்வியடைவதில்லை
தோல்வியில் முயற்சி என்றும்
தோல்வியடைவதில்லை

மனிதா
வலக்கையும் இடக்கையும்
எதற்கு ?
மனதில் நம்பிக்கை
இருக்கும்போது உனக்கு ...

எந்த வேர்வைக்கும்
முயற்சி முடிந்தவரை
வெற்றி கொடுக்கவே முயற்சிக்கும்

இயலாதென்று
முயலாது விட்டுவிடாதே
முயற்சித்துப்பார்
முட்களும் உன்னை முத்தமிடும்

இரண்டு ஆமைகளை
வீட்டில் நுழையவிடாதீர்
ஒன்று இயலாமை
மற்றொன்று முயலாமை

பூக்களைத்தேடியே
ஈக்கள் வரும்
வெற்றி என்ற ஆண் ஈ
முயற்சி என்ற தேன் ஈயைதேடியே வரும்

முயல் ஆமை கதையில்
முயலையே ஓட்டத்தில்
ஆமை வெல்வது
முயற்சியின் வெள்ளமே

முயற்சித்து நாமும்
தோல்வியினை வெல்லலாமே ....
மகிழ்ச்சியினை கொள்ளலாமே ...

எழுதியவர் : குமார் (16-Nov-15, 5:30 pm)
பார்வை : 203

மேலே