என் கல்லூரி நண்பர்களுக்காக!!!
துள்ளி திரியும் சிட்டுகளாய் !
பட்டு தெறிக்கும் முத்துக்களாய் !
எட்டு திசையிருந்தும்
உயரத்தை எட்டி பிடிக்கும் கனவுகளோடு !
எண்ணிலடங்கா ஆசையோடு !
யாரையுமே தெரியாத இவ்விடத்தை
ஆக்கிரமித்தோம் நன்கண்டுகளுக்கு முன்பாக!
அவை அனைத்தும் காலமாகி போனது தானாக!
ஒருவர் வாழ்கையில் கண்ட சொர்க்கம்
கல்லூரி பருவம் தான்! என சொல்ல்வதுண்டு !
அனால் நாம் வாழ்வினில் ஒவ்வொரு நாளும்
சொர்க்கம் தான் என வாழ்ந்து காட்ட வேண்டும்!
வாழ்ந்து பார்க்க வேண்டும்!
பணம் தான் பெரியது என்பவர்கள் மத்தியில்
அன்பும் பாசமும் அதை விட பெரியது
என உணர்த்தி சொல்ல வேண்டும்!
யார்ரோடு பழகுவது, பேசுவது என்றே
தெரியாமல் கல்லூரி பருவத்தை
துவக்கிய நாம்!
எதிர்சையாக, தன்னிச்சையாக !
அருகில் அமர்ந்தவர்களோடு
உரையாடி! உறவாடி!
காலபோக்கில் அவர்களையே உயிர்த்
தோழனாகவும் தோழியாகவும் உருமாற்றி
அவர்கள் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம்
நாம் கண் கல்கிய நாட்களுமுண்டு !
அது மட்டுமா!
நாம் பிறந்த அந்நாளை
நம்மகே தெரியாது கொண்டடுவர்களே!
ஆரவாரம் செய்வார்களே!
அப்பொழுது இதழில் சிரிப்போடு
கண்களை தழுவி நிற்குமே கண்ணீர் !
அதற்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் தகுமா?
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் திரும்ப வருமா?
என்ற கேள்விகளுக்கு நான் இடிருபதோ ஒரு பெரிய கேள்விக்குறி!
அடுத்ததாக!
கல்லூரி சேர்ந்தவுடன் மனதில் துளிர்விடும்
ஆசைதான் காதல்!
அந்த நேரத்தில் அரும்புவது மீசைய?
இல்லை காதலா? என்பதே
புரியாத பொற்காலம் அது!
அந்த காதலால் வரும் அவஸ்தைகள் எத்தனை?
உயிருக்கு உயிரை இருக்கும் நண்பனை
தனிமையில் விட்டு செல்வாய் !
உயிர் கொடுத்த தாயையே மறந்து செல்வாய்!
ஏன்? சுய நினைவை குட இழந்து செல்வாய்!
ஆனால்!
அந்த காதல் உன்னை தனிமையில் விட்டு செல்லும் பொழுது !
உனக்கு துணையாய் வருவது , நீ தனிமையில்
விட்டு சென்ற உன் தோழன் மட்டுமே!
உன் சோகத்தை தாங்க வருவது உன்
தாய் மடி மட்டுமே!
என்பதை மறந்து விடாதே!
கடத்து வந்த காலம்
மலரும் நினைவுகளாகி போனது!
மலர்ந்த நினைவுகளை
உதிராமல் பார்த்து கொள்விர்கள்
என்ற நம்பிகையுடன்!
உங்கள் நண்பன்!