மீண்டும் மீண்டும்

காதலைப் பாடிக் களைப்பும் அடைகிலேன்
ஆதலின் மீண்டும் அஃதையே உரைக்கிறேன்
வேதனை தீர்க்கும் வெஞ்சினம் போக்கும்
மோதலை நீக்கும் மூர்க்கம் தவிர்க்கும்
உள்ளம் தன்னில் ஒளியினை ஏற்றும்
கள்ளம் நீக்கிக் காமமும் போக்கும்
இன்னுஞ் சொலினும் இன்பம் இன்பமே
என்னுந் தன்மையால் இன்னுஞ் சொல்வேன்
மழலை உள்ளமாய் மலரச் செய்யும்
நிழலை வாழ்வினில் நிலைக்கச் செய்யும்
தாய்மை உணர்வினைத் தளிர்க்கச் செய்யும்
வாய்மை நிலையும் வாழ்வில் மிளிரும்
மீண்டும் மீண்டும் மெய்க்கா தலைநான்
மூண்டிடும் கவலைகள் முடக்கிப்பா டுவனே

எழுதியவர் : (16-Nov-15, 8:20 pm)
சேர்த்தது : ஞா நிறோஷ்
Tanglish : meendum meendum
பார்வை : 36

மேலே