அரும்புகள்
மழலைப் பேச்சில் மகிழுதென் உள்ளம்
குழந்தை தன்னைக் குலவிட இன்பம்
அரும்புகள் தாமும் அமைந்த வாழ்வில்
இருந்திடும் இன்பம் இனிதாய் நாளும்
தத்தி நடந்திடும் தளிர்களின் நடைதனில்
பித்தும் பிடித்திடும் பெருந்துயர் அகன்றிடும்
அலரும் முன்னர் அரும்பால் இன்பம்
அலர்ந்த பின்னும் அவற்றால் இன்பம்
ஆதலின் குழந்தையை அரும்பெனச் சொல்லி
காதலும் பெருகிடக் கவிபடைத் தேனே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)