மகிழ்சியின் முயற்சி
உடலோடு உயிர்வந்து
ஒன்றுவது போலே
உணர்வோடு ஒளிந்திருக்கும்
மண்ணின் உயர்ப்பிரவி
மனிதனின் மகத்துவதத்துவம்
மகிழ்ச்சி!
அமைதியில் பிறக்கும்
அகத்தில் இனிக்கும்
உறவில் திறக்கும்
ஊடலிலும் இருக்கும்
கனவிலும் விழிக்கும்
நனவில் நனைக்கும்
நீதியில் தெரியும்
அநீதியில் மறையும்
உழைப்பில் உதிர்க்கும்
ஊழலில் உலரும்
புனிதத்தில் மலரும்
பாவத்தில் உதிரும்
பொறுமையில் சிறக்கும்
மௌனத்தில் சிரிக்கும்
நம்பிக்கையில் துளிர்க்கும்
பிசேர்
உடலோடு உயிர்வந்து
ஒன்றுவது போலே
உணர்வோடு ஒளிந்திருக்கும்
மண்ணின் உயர்ப்பிறவி
மனிதனின் மகத்துவதத்துவம்
மகிழ்ச்சி!
அமைதியில் பிறக்கும்
அகத்தில் இனிக்கும்
உறவில் திறக்கும்
ஊடலிலும் இருக்கும்
கனவிலும் விழிக்கும்
நனவில் நனைக்கும்
நீதியில் தெரியும்
அநீதியில் மறையும்
உழைப்பில் உதிக்கும்
ஊழலில் உலரும்
புனிதத்தில் மலரும்
பாவத்தில் உதிரும்
பொறுமையில் சிறக்கும்
மௌனத்தில் சிரிக்கும்
நம்பிக்கையில் துளிர்க்கும்
பிறர்சேவையில் சிலிர்க்கும்
நற்செயல்கள் புரிந்திடும்
முயற்சியில்எல்லாம்
பரமனின் கொடையாம்
பவித்திர குணம்தன்
மகிழ்வுஎனும் பெயரில்
மண்ணில் முகிழ்க்கும்
மனதை நிறைக்கும்!!!