மசக்கை தாலாட்டு

மூலாதாரத்தில் சேர்த்து வைத்த உயிர் அணுக்கள் எல்லாமே
முந்த நீந்துதடி கண்ணே உன் கருவறை கடலினிலே
அழகே உன் அண்டக்கதவை முட்டி திறக்கவே
அலை மோதும் மோதும் அணுக்கள் - இறுதியில்
அண்ட கதவினை ஒன்று திறந்தது

இனிப்பான சேதி சொல்லி
புளிப்பெல்லாம் நீயே தின்றாய்
களைப்பான நேரம் என் தோள் சாயம்மா
ருசியான உணவும் என்ன
புசித்தாலும் பயனும் என்ன
பசியோடு வாழ பழகிக்கொண்டாய்
கண்ணே உன் பாடு கண்டு கண்கள் கலங்கினேன்
கற்பப்பையை என்னுள் வைக்க கடவுளை வேண்டினேன்


மாதங்கள் ஏற ஏற
மசக்கையும் வெளியில் தெரிய
அசைந்தாடும் தேர்போல் மெதுவாய் வா வா
பௌர்ணமியாய் உந்தன் கன்னம்
பளிச்சென்று அழகாய் மின்னும்
அள்ளி அணைக்க வயிற்றில் உதையும் விழும்
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற வாக்கியம்
உந்தன் பிரசவம் முடிந்ததும் செய்தேனே சத்தியம்

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (16-Nov-15, 11:46 pm)
பார்வை : 103

மேலே