மீண்டும் மீண்டும் போட்டிக்கவிதை
" உனது முக நூல்
பக்கத்தில்
என் முகம் தான்
முகப்பு பக்கமாய்..
- மீண்டும் மீண்டும்
உனது பேச்சு
இதுவரை யாரும்
பதிவேற்றம் செய்யா
பாடல்..
இனி
அது தான் என்
அலைப்பேசிக்கு
ரீங்காரமாய் ...
- மீண்டும் மீண்டும்
உனது மின்னஞ்சலில்
மறைத்துவைக்கப்பட
விடை நீ
அதன் வினா
நான் ..
- மீண்டும் மீண்டும்
உனது வாட்ஸ் அப்பில்
முதல் வரிசை
என்றும்
எனக்கு மட்டும்.
பின் வரிசையெல்லாம்
திருமண
ஆனவர்களுக்கு மட்டும்..
- மீண்டும் மீண்டும்
உனது டிவிட்டர்
பக்கத்தில்
பின் தொடரும்
நிழல்
நான்., அதன்
நிஜம் நீ ..
- மீண்டும் மீண்டும்
மேற்சொன்ன "உனது - என் "
என்பதை "எனது - உன் "
என்றாக்கிக்கொள் ..
இனி விடிகின்ற
பொழுதையெல்லாம்
நமதாக்கிக்
கொள்வோம்
என்று வாழ்ந்துவந்தா ..?
தினந்தினம்
செய்திதாளில்
உலா வரும்
"கள்ளகாதலின்"
நிகழ்வொன்று
வந்திடுமோ ?..
- மீண்டும் மீண்டும்
.