வசந்த அழைப்பு

அமராவதி ..!
இவர்களுக்காக
நான்
நூறு விருத்தங்கள்
பாடப்போவதில்லை

நீயும்
நூறு பூக்களை
எண்ணவேண்டியதும்
இல்லை

எப்படியும் இவர்கள்
சமாதிக்குத்தானே
சமர்ப்பிப்பார்கள்
நம் கவிதையை ?

*
இவர்கள்
பழைய நூற்றாண்டுகளின்
விலங்குகள்
நாமோ-
அடுத்த நூற்றாண்டின்
சிறகுகள் !
*
ஆசைகளுக்கு
சிறகு முளைத்த மாதிரி
உன்
தைரியத்திற்கும்
சிறகு கொடு

*
வா..!
புதிய பயணத்தின்
சிலிர்ப்புகளோடு

நான்
காத்திருப்பேன்
கடைசி ரயிலில் .... (1990)

("காதலின் பொன் வீதியில்" நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபாபதி (17-Nov-15, 6:47 pm)
பார்வை : 61

மேலே