மகிழ்ச்சியின் முயற்சி

பேய் மழை ஓய்ந்த பின்
சிறு புல்லில் சிரித்து மலரும்
சிறு பூவின் செய்தி என்ன ..?

வேறோர் மதத்தினரின்
வழிபாட்டு தலம் சென்று
நண்பன் முகம் பார்த்து
அகமலர்ந்து...
செய்யும் பிரார்த்தனையின்
அர்த்தமென்ன...?

பிரிகையில் வரும்
கண்ணீரை மறைத்து
புன்னகைக்கும்...
இதழ்கள் சொல்வதென்ன...?

உழைத்து களைத்து...
வீடு திரும்புகையில்...
எதிர்ப்படும் யாசகனுக்கு
இருப்பதை இடும்
ஈகையின் பெயரென்ன..?

மஹா சக்தி இயக்கும்
இந்த பிரபஞ்சத்தின்
ஒவ்வோர் அணுவும்
மீண்டும் துள்ளி எழுந்து
துளிர்ப்பதென்ன... தன்னியல்பில் முயன்று
தன்னளவில் மகிழவே!!!!!

எழுதியவர் : குருநாதன்.V (17-Nov-15, 7:14 pm)
பார்வை : 52

மேலே