உரிமைகள் பறிக்கப்படும்
உரிமைகள் பறிக்கப்படும் !
_______________________________
செய்த தவம் என்னவோ நான்
தமிழனாய் பிறப்பதற்கு - ஆனால்
தமிழ் இன்றும் செய்கிறது பெரும் தவம்
தமிழனாய் பிறந்த என் நாவில்
பிறப்பதற்கு; ஏனெனில் தமிழனிடமே பாவமொழியாம்
தமிழுக்கு இங்கே உரிமைகள் பறிக்கப்படும் !
பெற்ற தாயை கொன்று தின்பவனுக்கே
உயிர்வாழ தகுதியுண்டு என்ற விதிப்படி
சுயத்தை இழந்து எனைப்போல் சுயநலத்திற்காய்
அயல்நாடு சென்று தாய்மொழியைக் கொன்று
வாழ்பவனுக்கே உரிமைகள் வழங்கப்படும் - ஏனெனில்
தமிழுக்கு இங்கே உரிமைகள் பறிக்கப்படும் !
தமிழனாய் பிறந்து தமிழென்னும் தொப்புட்கொடியை வேரறுத்து வேற்று மொழிக்காரனுக்கு அடிமையாகாது எனை மறந்து கண்ணீர் கசித்து
எந்தமிழை நான் உச்சரித்து விட்டால்..
இச்சமுதாயம் எனை எச்சரிப்பதாவது.. - இவ்வுலகில்
எனக்கான உரிமைகள் பறிக்கப்படும்!
ஆகையால் ..
தமிழனிடமே தமிழுக்கான உரிமைகள் பறிக்கப்படும்!
-ஜெயவர்த்னி