jeyavarthni - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : jeyavarthni |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 18-Apr-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 5 |
இவள் கவிதாயினி......
மகிழ்ச்சியின் முயற்சி
____________________________
ஒன்பதரை மாதக் குருதிப் புழுவாய்
எனை கருவில் சுமந்தவளே - இன்று
சிறகு முளைத்தப் பட்டாம்பூச்சி ஆனப்பின்னும்
உனை விட்டுப்பறக்க முடியவில்லையடி என்னால் !
என் மகிழ்ச்சியின் முயற்சி ஒன்றுதானடி ...
பெண்ணே நான் பிறந்த போது
சுவாசித்த முதல் வாசம் உனதடி ;
நான் இறந்தப் பின்னும் கூட
உன் ஆடையை என்மீது போர்த்தடி ...
என் சாம்பலிலும் உன் வாசம் வீசட்டும்!
-ஜெயவர்த்னி

போட்டி தலைப்புகள்:
வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்
உரிமைகள் பறிக்கப்படும் !
_________________________________
செய்த தவம் என்னவோ நான்
தமிழனாய் பிறப்பதற்கு - ஆனால்
தமிழ் இன்றும் செய்கிறது பெரும் தவம்
தமிழனாய் பிறந்த என் நாவில்
பிறப்பதற்கு; ஏனெனில் தமிழனிடமே பாவமொழியாம்
தமிழுக்கு இங்கே உரிமைகள் பறிக்கப்படும் !
பெற்ற தாயை கொன்று தின்பவனுக்கே
உயிர்வாழ தகுதியுண்டு என்ற விதிப்படி
சுயத்தை இழந்து எனைப்போல் சுயநலத்திற்காய்
அயல்நாடு சென்று தாய்மொழியைக் கொன்று
வாழ்பவனுக்கே உரிமைகள் வழங்கப்படும் - ஏனெனில்
தமிழுக்கு இங்கே உரிமைகள் பறிக்கப்படும் !
தமிழனாய் பிறந்து தமிழென்னும் தொப்புட்கொடியை வேரறுத்து வேற்று மொழிக்காரனுக்கு அடிமையாகாத
உரிமைகள் பறிக்கப்படும் !
_______________________________
செய்த தவம் என்னவோ நான்
தமிழனாய் பிறப்பதற்கு - ஆனால்
தமிழ் இன்றும் செய்கிறது பெரும் தவம்
தமிழனாய் பிறந்த என் நாவில்
பிறப்பதற்கு; ஏனெனில் தமிழனிடமே பாவமொழியாம்
தமிழுக்கு இங்கே உரிமைகள் பறிக்கப்படும் !
பெற்ற தாயை கொன்று தின்பவனுக்கே
உயிர்வாழ தகுதியுண்டு என்ற விதிப்படி
சுயத்தை இழந்து எனைப்போல் சுயநலத்திற்காய்
அயல்நாடு சென்று தாய்மொழியைக் கொன்று
வாழ்பவனுக்கே உரிமைகள் வழங்கப்படும் - ஏனெனில்
தமிழுக்கு இங்கே உரிமைகள் பறிக்கப்படும் !
தமிழனாய் பிறந்து தமிழென்னும் தொப்புட்கொடியை வேரறுத்து வேற்று மொழிக்காரனுக்கு அடிமையாகாது
அன்று நான் மட்டுமே உன்னை காதலித்தேன்,
இன்று எனக்கு போட்டியாக என் கவிதைகளும்
உன்னை காதலிக்கிறதே !? ........
- ஜெயவர்தினி...