விஞ்ஞானம்

நீ பாத்த ஊரு இல்ல – இப்ப
எவ்வளவோ மாறி(ரி)ப்போச்சு..
நடக்க கூட வேண்டாமம்மா – இங்க
தரையும் கூட நகருதம்மா!
ஆற்றுநீரில் கழிவுநீரை கலந்தவனோ – இன்று
கடல்நீரை நன்னீராய் மாற்றப்பாக்குறான்..
தரையை துளையிட்டு தண்ணீர் தேடுறான் – அட
விண்ணைத்தாண்டி என்ன தேடுறானோ?!?
கற்பப்பை வரைக்கும் படம் போட்டு காட்டிப்புட்டான்
கற்பினை காக்க ஏனோ மறந்துப்புட்டான்..
தாலாட்டும் காலமெல்லாம் மலையேறிப்போச்சு – இப்போ
டால்(பொம்மை) ஆட்டும் காலமோ தொடங்கியாச்சு..
சொட்டைத்தலை தாத்தாவை மறந்துட்டாங்க – இப்பெல்லாம்
சோட்டா-பீம் போட்டாத்தான் தூங்குறாங்க!
வெற்றுக் கண்ணால் கண்டோம் காட்சி – இன்றோ
ஆன்டிரைடு வந்து செய்யுது ஆட்சி..
நெருப்பில் தொடங்கி
நெகிழி வரையிலும் அழிவை – தானே
தேடிக்கொண்டான்..
வியாதிகளோ கூடிருக்கு – ஆனா
மருந்துகளோ நிறைஞ்சிருக்கு..
உணவே மருந்து என்பது மாறி – இன்று
மருந்தே உணவு ஆவது கண்டேன்..
அணுகுண்டைப் படைத்தான்
அழிவுகளை ரசித்தான்..
அண்டத்தை படைத்தான்
அற்புதங்களை நிகழ்த்தினான்..
பூஜ்ஜியத்தை படைத்தான்
கணக்கீடுகளைத் தொடர்ந்தான்..
கடிகாரத்தைப் படைத்தான்
காலங்களை கூறிட்டான்..
எல்லாம் உண்டு எம் உலகில் – நீயோ
எல்லாம் ஏற்றுக் கொள்ளாதே!!
நன்மை, தீமை பிரித்தறிய
நல்லதோர் கருவி நம் மனமே!!!

எழுதியவர் : ஹரிபிரகாஷ்.இரா (17-Nov-15, 10:12 pm)
Tanglish : vignaanam
பார்வை : 735

புதிய படைப்புகள்

மேலே