அக்கா ~~ அர்ஷத்

பார்வையில் பாசம் பொழிந்திடுவாள்
==நெஞ்சிலே நேசம் தைத்திடுவாள்
சண்டைகள் போட்டு போனாலும்
==உறவை மீண்டும் மீட்டிடுவாள்

தீராத சேட்டைகளாலே நெஞ்சில்
==நிறைந் திடுவாள் துன்பம்
எனை தீண்டும் போது
==துடைத்து எரிந்திட வந்திடுவாள்

நட்பின் கதவை திறந்தாள்
==முதலில் அவளே நின்றிடுவாள்
நங்கூரம் போட்ட கப்பல்
==போல மனதில் தங்கிடுவாள்

பந்தம் கயிற்றில் என்னையும்
==அவளையும் கோர்த்தே வைத்திடுவாள்
நட்பு சண்டை இரண்டுக்கும்
==இடையே கூட்டிச் சென்றிடுவாள்

அவளைப போலே அவள்தான்
==என்ற எண்ணம் தந்திடுவாள்
ஜென்மம் முழுக்க இவள்
==சொந்தத்திற்கு ஏங்க வைத்திடுவாள்

இவள் போல அன்பின்
==தொல்லை யாரும் தருவதில்லை
தொல்லை நூறு தந்தாலும்
==அவள்தான் அன்பின் முல்லை

எந்தன் ரகசியம் காக்கும்
==சாவி அவள்தா னென்பேன்
அவளின் பாசம் முன்னாள்
==மலையும் சிறிது என்பேன்

எழுதியவர் : அர்ஷத் (19-Nov-15, 11:40 am)
பார்வை : 4660

மேலே