அரசியல்

வினோத அழைப்பொலியும்
விரலிடுக்கு
ஒற்றை நெல்லும்

திறந்து விட்ட
கம்பிகளுக்கு வெளியே
தெரியும்
சீட்டுக் கட்டுமாய்

இயந்திரத்தனமாய்
போகிறது வாழ்க்கை
கூண்டுக் கிளிக்கு

அதற்கு
வெட்டப்பட்ட சிறகுகளின்
வேதனையோ
தட்டிப் பறிக்கப்பட்ட
சுதந்திரத்தின் அருமையோ
தெரியாமலேயே போக

ஜோராகப் போகிறது
ஜோசியகாரனின் பிழைப்பு

எழுதியவர் : (19-Nov-15, 2:59 pm)
Tanglish : arasiyal
பார்வை : 383

மேலே