ஆண்கள் தின வாழ்த்துக்கள்
ஜான் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை என்ற
அடைமொழியில் அம்சமாய்
அவணியில் அவதரித்து
கிருஷ்ண லீலைகளால்
பால்யப்பருவத்தில்
அன்னைக்கு பெருமை/பொறுமை சேர்த்து
ஓடி விளையாடு பாப்பா என்ற
பாரதியின் வரிகளுக்கு இணங்க
பள்ளிப்பருவத்தில்
புத்துணர்ச்சியுடன் சிறகடித்து
வெற்றிக்கு படிப்பறிவு அவசியமல்ல
பகுத்தறிவு தான் அவசியம் என
பதவியில் படியேறி
இனிய கனவுகளை
இதயத்தில் சுமந்து
இல்லாளை கைப்பிடித்து
இல்லறத்தில்
பிரம்மாவாய்
விஷ்ணுவாய்
முருகராய்
விக்னேஸ்வரராய்
மனைவி மக்களை பாதுகாத்து
பொறுப்புகளை
பொறுப்பாய் சுமந்து
அமைதியாய்
ஆளுமை செய்து
அபாராமாய் சாதனை புரியும்
ஆண்களே .....
உங்களின் சிறப்பு அம்சங்கள்
அபராமான அறிவுத்திறன்
இறுக்கமான சூழ்நிலையில்
முடிவெடுக்கும் திறன்
ஆயும் தன்மை
தொழில் நுட்பத்திறன்
எதையும்
எளிதாய் எடுக்கும் மன பக்குவம்
உலகறிவு
உள்ளதை உள்ளபடி உரைக்கும் சுபாவம்
உள் வைத்து புறம்
வெளிப்படுத்த அறியா
அதீத பாசம்
வீரமாய் எதிர் கொள்ளும் துணிச்சல்
உதவிடும் தன்மை ...
ஜான் பிள்ளையானாலும் நீங்கள்
ஆன் பிள்ளை தான் ......
ஆண்கள் தின நல் வாழ்த்துக்கள் !!!