நண்பர்கள் - கற்குவேல் பா
மணி அடித்த நொடியில்
தட்டை தூக்கிக்கொண்டு
வரிசையில் நின்று
வாங்கிய சத்துணவை
எடுத்துக் கொண்டு
வேப்பமர நிழலுக்கடியில்
அமர்ந்த நொடியில் - மரத்தில்
களவியில் இருந்த
இரண்டு புழுக்கள் தவறி
தட்டில் விழ ,,,
அவற்றை அகற்றி விட்டு
உண்ண முனைந்த தருணம்
என் கையை தட்டி விட்டு
உன் உணவை என்னுடன்
பகிர்ந்து கொண்ட நீயும் - அன்று
சத்துணவு முட்டையை
உன்னுடன்
பகிர்ந்து கொண்ட நானும்
நண்பர்கள் எனப்படலாம் !