தடை கற்கள்

தடைகற்களால்
தடை வந்த போதும்
தடையை தாண்டி
நடை போடுவோம் ==

நம் வாழ்க்கை
பிறருக்கு ஒரு
கருத்து
சொல்வதாய் அமையட்டும் ==

எவ்வளவு தூரம்
அடியில் வீழ்கின்றோமோ
அவ்வளவு தூரம்
உயர செயல்படுவோம் ==

இன்னல்கள் நம்மை
அழிக்க ஏற்படுவதில்லை
நம்முள் இருக்கும்
சக்தியை வெளி கொண்டு வர தான் ==

ஒவ்வொரு வினாடியும்
ஒரு புதிய ஆரம்பம்
புதிய ஆரம்பத்தை
புத்துணர்ச்சியுடன் சந்திப்போம் ==

இன்னல்கள் எனும்
காற்றால் தள்ளப்படும் போது
எதிர் விசையை பயன்படுத்தி
விமானம் போல் மேலே பறப்போம் ==

ஒவ்வொரு தடைகற்களும்
நம்மை உயர வைக்கும் அடிகற்கள்
என்பதை நினைவில் வைப்போம் ==

எழுதியவர் : கிருபா கணேஷ் (21-Nov-15, 12:30 pm)
Tanglish : thadai karkal
பார்வை : 625

மேலே