போர்வைக்குள் ஒரு போர்க்களம்

நடுநிசி இரவில்
நடுங்கிடும் குளிரில்
தனிமையான அறையில்
நீயும் நானும் அருகில்............................!
எல்லோரும் தூங்கினாலும்
தூங்காமல் விழித்திருக்கும் நம் கண்கள்...................!
இரண்டு அடி இடைவெளியில்
துடித்திருக்கும் நம் இதயம் ........................!
ஏக்கங்களுடன் எதிர்பாத்திருக்கும் நெஞ்சம்
தயக்கங்களுடன் தவித்திருக்கும் கொஞ்சம் ........................!
இரவுக்கும் தெரியாமல்
காற்றுக்கும் புரியாமல்
போர்வைக்கும் அறியாமல்
மெல்லமாய் தொடுக்கிறேன் உன் ஸ்பரிசத்தை.....................!
கட்டி பிடிக்காமல்
முத்தம் கொடுக்காமல்
செல்லமாய் இறுக்குகிறாய் நம் நெருக்கத்தை ..................................!
உன் உள்ளங்கை வெப்பத்தில்
தேகமும் சூடாகும்....................!
நீ தரும் முத்தத்தில்
என் விரல்களும் பூவாகும் ............................!
உன் கன்னத்தை கிள்ளினேன்
என் கைகளை நீ தள்ளினாய்........................!
உன் இதழ்களை பிடித்தேன்
என் விரல்களை நீ கடிதாய்......................!
பருவம் மலர்ந்த பிறகும்
இரவின் மடியில்
மழழைகளாய் நாம்...............!
போர்வைக்குள் ஒரு போர்க்களம்
இதழ்கள் நான்கும் யுத்தம்
செய்கிறது முத்தத்தால்..........................!
இமைகள் நான்கும் மூடிகொள்கிறது
வெக்கத்தால் .......................
வெயில் படாத உன் இடத்தை
என் விரல்களால் தீண்டும் பொது
மயங்கி நீயும் விழுகிறாய்
மயக்கம் எனக்கு தருகிறாய்.........................!
கொஞ்சம் நேரம் கொஞ்சினோம்
கொஞ்சும் நேரம் கெஞ்சினோம்
கெஞ்சும் நேரம் மிஞ்சினோம்
மிஞ்சும் நேரம் அஞ்சினோம்...................!
இரவு முழுதும் விழித்திருந்தோம்
விடியும் முன்பே தூங்கினோம் .....................!