கட்டுடலால் ஆவதென்ன ஆண்கள் தினத்திற்கான அர்ப்பணிப்பு

ஈரம் கப்பிய அந்த
மாலையும் இரவும்
சந்திக்கும் வேளையில்
ஏற்பட்ட இடைவெளியைத்
தொலைக்கும் நோக்கில்
ஊர்ப்பட்ட காதலுடன்
அவளை நோக்க,
தேங்கிக் குளம் போல்
நின்ற நீரில் ஸ்வரம்
எழுப்புவது போல்
ஒற்றை விரலைத்
தீண்டித் திவலைகள்
அலைகளாய் நெளிவதை
அவள் பார்த்து நிற்க;
சடசடவென்று சட்டெனச்
சாரல் மழையது வீச,
படபடவென்ற காற்றில்
தட்டுத் தடுமாறி
குடையினை விரித்திட,
மண்டியிட்டிருந்தவள்
மழையினைச் சிறிதும்
பொருட் படுத்தாமல்,
“இரும்பு மனிதர்க்கே
மழையில் நனைந்தால்
துருப் பிடிக்கும்”
நீயென்ன இரும்பு
மனிதனாவென என்னைக்
கேட்பது போலே
புருவம் உயர்த்திப்
புன்னகை செய்தாள்!

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (19-Nov-15, 5:08 pm)
பார்வை : 109

மேலே