என்னை பற்றி நானே
பிறருக்காக வாழும் சுயலநலவாதி நான்
முற்போக்கு சிந்தனைகள்
கொண்ட முட்டால் நான்
தனி திறன்கள்
கொண்ட சாமானியன் நான்
அனைவரையும் மதிக்கும் திமிரு பிடித்தவன் நான்
கற்பை இழக்காத கண்ணன் நான்
எழுத்துப்பிழைகள் செய்யும் எழுத்தாளன் நான்
பிம்பங்களால் உருவாக்கப்பட்ட
உண்மை பொருள் நான்
எல்லோரிடமும் உண்மையாய் பழகும் ஏமாற்றுக்காரன் நான்.
மிருக குணங்களற்ற
சமூக விலங்கு நான்.
அவ்வப்போது உண்மைகளும் பேசும்
அரிச்சந்திரன் நான்
எப்போதும் நட்புவட்டங்களால்
சூழப்பட்டிருக்கும்
தனிமை விரும்பி நான்.
தன்னடக்கம் தற்பெருமை
இடைவெளி உணர்ந்தவன் நான் .பொய்யாக நடிக்கும் நல்லவன் நான்
முரண்களின் முழு உருவம் நான் .
நான் நிஜமல்ல
நிழல்களால் உருவாக்கப்பட்டவன்
#சுஜித்