காவு வாங்குகிறது

யதார்த்தக் கண்ணன்கள்
அலைப்பேசி தடவியபடி
ஓர விழி வழிகிறார்கள்

யதார்த்த ராமர்கள்
தங்கள் நொடிகளை
வாட்சப்பிலே உடைக்கிறார்கள்

யதார்த்த அர்ச்சுனர்களுக்கு
நான்கு பேர் சேர்ந்து யதார்த்த நட்பிலே கர்ணனை நினைவுறுத்துகிறார்கள்

யதார்த்த ராவணர்களின்
பார்வையை சீதைகள்
தங்கள் கைப்பிடி இறுக்கத்தில்
காட்டுகிறார்கள்

யதார்த்த அரிச்சந்திரன்களில்
ஒரு சிலர் பேருந்தில் பயணிப்பதாக
பேசி விட்டு போனை அனைக்கிறார்கள்

யதார்த்த கருவாட்டுக் காரி
பேரக்குழந்தையின் அரை டிக்கெட்டுக்காக பாரதப் போர்
புரிகிறாள்

யதார்த்தவாதிகள் இறங்குகிறார்கள்
ஏறுகிறார்கள்
ஆனாலும்
கவனக்குறைவுள்ளவர்களை
மட்டுமே காவு வாங்குகிறது
இம்மாநகரப் பேருந்து !

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (19-Nov-15, 8:46 pm)
Tanglish : kaavu vangukirathu
பார்வை : 100

மேலே