குடியிருந்த கோவில்
பிறந்ததும் - நம்
கண்கள் திறந்ததும்
அகிலமெல்லாம் ஆயிரம்
தென்படும் - ஆயினும்
நம் இதழ்கள் உதிர்க்கும்
முதல் சொல் அம்மா.
உணவளிக்கப் பலருண்டு
அவர்களெல்லாம் சும்மா
உணவோடு உணர்வையும் அளிப்பாள்
அவள்தான் அம்மா.
நாம் ஒரு முறை பிறக்க
பத்துத் திங்கள்
செத்துப் பிறந்தவள் அம்மா
அழுதாலும், சிரித்தாலும்,
அடிபட்டு வலித்தாலும்
அம்மா என
அன்போடு அழைத்தால்
அபாய ஆள்தோட்டமும்
அற்புதப் பூந்தோட்டமே
அரக்க நரகமும்
அழகிய சொர்கமே