தானம்

பூமித்தாய் மடியில
புழுதியோட அலையுறேன்
உதவி செய்யத்தான்
உறவு ஆருமில்ல
உழைச்சு தின்னத்தான்
உடம்புல தெம்பும்மில்ல
பிச்சகார பயலுனு
எச்சி துப்புறாங்க
பகட்டா வாழ
பணத்தை கேட்கலியே
வயித்து பொழப்புக்கு
வேற வழியிலேயே
பசிய படைச்சவனும்
பணத்தை கொடுக்கலியே
கஞ்சன் நிறெஞ்ச
உலகத்துல
தானம்மா உயிர தர
தயாரா இருக்கிறேன்
வாங்கிக்கிற வரலியே
அந்த பிச்சைகார கடவுளு.........

எழுதியவர் : gajapathi (20-Nov-15, 3:36 pm)
பார்வை : 100

மேலே