கண்களை கவரும் புதுக்கவிதை அவள் 555

உயிரானவள்...
மனம் ஒரு சங்கப்பலகை அதில்
அவள் முகம் அழியாத கவிதை...
உயிரானவளின்
பார்வை மோனை...
அவள் இதழ்கள் கொஞ்சும்
சிரிப்பு எதுகை...
அவள் கைகள்
இரண்டும் நெடில்...
அவள் கால்பாதங்கள்
இரண்டும் கார்குழல்...
எட்டு தொகையின்
வடிவம் அவள்...
அவளின் நிழல் வெண்பா...
அவளின் பொன்மேனியில் பதிந்த
மச்சங்கள் தமிழ் மாதங்கள்...
என் கிறுக்களில்
அவள் ஆழி...
தித்திக்கும் அவள் கன்னத்தில்
விழுமே குழி...
அவளின் விழி இமைகள்
இரண்டும் குறலடிகள்...
அவள் விரல்களுக்கு
நகங்களே வஞ்சிப்பா...
மொத்தத்தில் கண்களை
கவர்கின்ற புதுக்கவிதை அவள்.....