தேவதைகள் தூங்குகிறார்கள் பாகம் 9 -ஆனந்தி

காலை கதிரவனின் ஒளிக்கிரணம் வண்ணமாய் மண்ணைத் தொட்ட வேளை, விஜியின் நண்பன் ஆதி ஒரு கையில் ஆவி பறக்கும் காபியை சுவைத்தவாறே மறு கையில் தினசரி நாளிதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்....மூன்றாம் பக்கத்தில் விஜியின் புகைப் படத்தோடு, நக்சலைட் தீவிரவாதி யா? கைது என்ற செய்தி கண்டதும், கண்கள் நிலைக் கொத்தி அப்படியே சிலையாய் சிலைத்திருந்தான்...உலகமே வல இடமாக, இட வலமாக என மாறி மாறி சுழன்றது...என்ன செய்ய என திகைப்பினில் வழி மறந்த வழிப் போக்கனாய் திக்கற்று நின்றான்...

அதே நேரம் விஜியின் வீட்டினில் நாளிதழ் செய்தியின் பரபரப்பு, தீயினில் இட்ட பெட்ரோலாய் பற்றிக் கொண்டது...விஜியின் அம்மா அம்சவர்தினி சற்றே தலையை பிடித்தவாறே சோபாவில் தஞ்சம் புகுந்தார்...விஜியின் அப்பா பாலா, செழியனிடம் "என்ன தான் நடந்தது?" அண்ணன் வேலை விஷயமா சென்னைக்கு போயிருக்கானு சொன்ன? செழியனின் முகத்தில் பய ரேகை ஒன்று புதிதாய் படர்ந்தது...

அம்சாவே பேச்சை தொடர்ந்தார்...அவன் அப்டி தான் உங்க கிட்ட சொல்ல சொன்னான்...எங்கிட்டயும் முக்கியமான வேலையா தான் சென்னை போறேனு சொன்னான்....ஆனா நேத்து கால் பண்ணும் போது நண்பன் ஒருவனுக்கு காதல் தோல்வி என்றும், அவன் தற்கொலை முயற்சி செய்ய முயன்றதாகவும், அவனை பார்க்க தான்,,, சென்னை வந்ததாகவும், அவனை பார்த்து விட்டதாகவும் தான் ஊருக்கு தான் கிளம்பிட்டு இருக்கேனும் சொன்னாங்க...

நேத்து இவன கைது பண்ணும் போது ஒரு பொண்ணும் கூட இருந்ததாகவும், அவ தப்பிச்சிட்டதாகவும், அவளும் ஒரு தீவிரவாதியா இருக்லாம்னு போலீஸ் சந்தேகிப்பதாகவும் போட்ருக்கே....ம்ம் அவ பேரு கூட விஷாந்தினி...என்று பாலா சொல்லவும், செழியனின் உயிர் செல்கள் பயத்தில் உறைந்து போனது...

தனக்கு தானே மனதை திடப்படுத்திக் கொண்டு பேச்சை தொடர்ந்தான் செழியன்...விஷாந்தினி அண்ணா லவ் பண்ற பொண்ணு...விஷாந்தினி....

விஷாந்தினிய ஒரு முறை அண்ணனோட பார்க்ல பார்த்தேன் எனக்கு அவ்ளோ தான் தெரியும்...அண்ணாவோட பிரண்ட் ஆதிக்கு ஏதாச்சும் தெரிஞ்சிருக்கும்....ஆதி அண்ணாக்கு போன் பண்லாம் பா என்றதும்...வீடே பதற்றத்தில் தொற்றிக் கொண்டது...

எதிர் திசையில் அலைபேசி சிணுங்கியதினில் திகைப்பினிலிருந்து மீண்டவனாக, இயந்திரமாய், அலைபேசியின் திரையைக் கண்டான்...ஆதி...விஜி ஹோம்
என்றிருந்தது...என்ன பதில் சொல்ல என யோசிப்பினூடே சிணுங்கல் நின்று போனது...என்னனவோ யோசனை ஆதிக்குள்...விஜி தீவிரவாதியா? ஆதங்கமாய் பலமுறை பேசி கேட்டிருக்கிறோம் அதிலும் முதலாளித்துவத்தை பற்றியும், சமதர்மத்தைப் பற்றியும் பேசும் போது கண்களில் ஆவேசம் தெறிக்கும், அனல் எரிக்கும், வெறி துடிக்கும்.....என நினைத்திருக்கையில்,,,ஆதியின் மூளை திரவம் பல நூறு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை அடைந்திருந்தது...


அதே நேரம் என்னாச்சிடா ரிங் போகுது ஆதி அண்ணா எடுக்கல... என் பையன் ரொம்ப நல்லவன் தப்பு ஏதும் பண்ணியிருக்க மாட்டான் எப்படியாச்சும் காப்பாத்துங்க என்று எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தாள் அம்சா...வாசலில் யாரோ அழைக்கும் சத்தம், யுத்தத்தின் பேரிரைச்சலாய் இருந்தது...என்னவென பாலா பார்க்க,,, கதவைத் தட்டியது ஒரு காக்கிச் சட்டை...

அதே நேரம் விஷாந்தினி, அது ஒரு இருள் நிறைந்த இடமாக இருக்கலாம்...கண்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவளுக்கு மட்டும்... மூச்சு திணறி தட்டு தடுமாறி சுவாசித்து, மனம் முழுக்கப் பதற்றத்தோடு, அரை மயக்க நிலையிலும், ஏக்கத்தோடு 'விஜி' 'விஜி' என எண்ணங்களுக்குள்ளே சிறகை விரித்தாள்...அவளை மெதுவாக வருடிய தென்றல் சொன்னது அது ஒரு மலைப் பிரதேசமாயிருக்கலாம் என...கூடவே களைக்கட்டும் கம்பளி வாசமும், ரோஜாக்களின் நறுமணமும், காப்பி செடியின் வாசமும் சொல்லாமல் சொன்னது நிச்சயமாய் மலை பகுதி தான் என...

நெஞ்சினில் ஏக்கம்,
கன்னங்களில் வீக்கம்,
வயிற்றினில் பசியின் தாக்கம்.

இவ்வளவு துயரிலும் 'விஜி' 'விஜி' இந்த இரண்டு எழுத்துக்களில் இத்தனை இன்பமா? உச்சு வெயிலில் தார் சாலையிலிட்ட ஐஸ் கிரீமாய் கரைகிறேன் அவனுள்ளே...

எனை மீட்டெடுக்க மீண்டு வருவானோ...மீண்டும் வருவானோ...அறை திறந்திடும் சத்தம் கேட்டு விஷாந்தினியின் நினைவுகளும் அப்படியே அங்கேயே நின்றது...

அதே நேரம் இரகசிய இடம் ஆவேசம் தணித்து உள்ளே வந்த போலீஸ் அதிகாரி வேளாங்கண்ணி, காவலர் வெங்கட் இடம்...அவன் ஏதாச்சும் சொன்னானா? அந்த பொண்ணு விஷாந்தினி பத்தி ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா? திருப்தி படும் படியான தகவல் ஒன்னும் இல்லைங்க சார்...செத்து கித்து தொலைய போறான் ஒரு டீ வாங்கி தந்து, சரி பண்ணி கூப்ட்டு வா கோர்ட்ல ஒப்படைச்சிடலாம்...
என்று சொல்லி விட்டு அவரது தனியறையை நோக்கி நடந்தார் வேளாங்கண்ணி....

வெகுவாய் மூலையில் சுருண்டு கிடந்த விஜியின் காதுகளில் 'விஷாந்தினி' என்ற பெயர் மட்டும் அசரீரியாய் கேட்டது...

நினைவுகள் நீள்கிறது நானும் என் தேவதையும், நவரசம் பூக்கும் நந்த வனத்தினில்...மெல்லினத்தின் மொத்த உருவாய் யாதுமாகி நிற்கிறாள்......மெல்லிசை காற்று மௌனத்தோடு மனதில் சிலிர்ப்பையும் சேர்த்து விடுகிறது...அவளின் கரங்களோடு என் கரங்களும், ரோஜாவோடு சேர்ந்திருக்கும் பனித்துளிப் போல...அவளின் பார்வைகளின் ஸ்பரிசத்தில் கவி நூறு எழுதுகிறேன்...என் கண்களினாலேயே...அவளின் இதழ் தீண்டி முத்தத்தின் மோட்சம் உணர்ந்திடுகிறேன்...அவள் என் இதழினில் புன்னகைக் கோர்க்கிறாள்......அவளின் கொஞ்சு மொழிக் கேட்டு கிறங்கிக் கிடக்கிறேன்...அவளின் இதழ் சுவையறியப் பேசுகிறது...என் எண்ணங்கள் மையம் கொண்டது மீண்டும் அங்கேயே...தொலைத்த வானில் கண் விழிக்கும் சூரியன் போல் மீண்டும் அவளின் இதழ் தீண்டுகிறேன் மிச்சமின்றி...கொள்ளளவு தாண்டியதில் மௌனத்தை உடைத்தாள்...
பெண்மைக்கு பேரழகு கூட்டும் வெட்கம் திரும்பிடா சிறைப்பட்டு...திசைமறந்ததா? மனமின்றியா? நான் மௌனப்பட்டு....

காவலர் வெங்கட் ம்ம் இந்தா டீய குடி என்று அதிகார தொனியில் சொல்லவும் நினைவுக்கு வந்தவனாய் விஜி.... இங்கிருந்து தப்பிக்க ஏதேனும் வழியுண்டா மூளையின் ஒவ்வொரு செல்லும் யோசனையில்....

....'வீ....' யை நினைத்துக்கொண்டான் மீண்டும்...

அவளின் பார்வைகளின் பதிவுகள் என்னுள் மீளாமல்.....

சத்தம் ஏதோ வரவும், அனைவரின் கவனமும் ஒரு சேர திரும்பியது...விஜி உட்பட...நால்வர் புரட்சி படையொன்று இரகசிய இடத்தை சூறையாடத் தொடங்கியது...சற்றே நினைவுக்கு வந்தவனாய் விஜியும், ஓ... பாஸ் சக தோழர்களை அனுப்பி நம்மை காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்...

என்ன சத்தம் பாருங்க வெங்கட் இடம் வேளாங்கண்ணி சொல்லி முடிக்கவும், நால்வர் படை இரகசிய இடத்திற்குள் வரவும் சரியாய் இருந்தது...

என்ன நடக்கிறது என காவலர்கள் சுதாரிப்பதற்குள், நால்வர் படையின் துப்பாக்கி குண்டின் மழை இடைவிடாது...

சரியாய் சொல்ல வேண்டுமெனில் ஓர் யுத்த களம் போல, காட்சி அளித்தது இரகசிய இடம்...

வேளாங்கண்ணி நெற்றியில் தோட்டா துளைத்ததில், நிலை தடுமாறி சரிந்தார்...ஏட்டு ஏகாம்பரம் கையினில் தோட்டா பட்டதில் மேசை மீது சரிந்தார்...காவலர் வெங்கட்கு அடி ஏதும் பலமாய் இல்லையென்றாலும், குப்புற விழுந்து அடிப்பட்டது போல நடித்துக் கொண்டிருந்தார்...

நால்வர் படையின் கவனம் இப்போது விஜியின் மீது திரும்பியது...நால்வரில் ஒருவன் தனது கை துப்பாக்கியாலே, சிறையின் பூட்டை லாவகமாய் விடுவித்து, ம்ம்...விஜி வா வா....என்ற அழைக்கவும்...ஐவரும் வட திசை நோக்கி, ஓட ஆரமித்தனர்...

ஆனாலும், இவர்கள் நால்வரையும் இதற்கு முன் பார்த்ததே இல்லையே...என்ற சிந்தனையோட ஓடி கொண்டிருந்தான்...விஜி....எப்படியோ, என் தேவதையை மீட்டு எடுக்க ஒரு வழி கிடைத்தது....

நால்வர் படை வெளியேறியதும், காவலர் வெங்கட் தட்டு தடுமாறி...அவரது கைபேசியை எடுத்து "ஹலோ கட்டுப்பாட்டு அறை" என்றார்...


........................
..............................தொடரும்...........


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: நன்றி.......... நண்பர் திரு.கவிஜி அவர்களே.....

அடுத்த பாகம் தொடர விரும்புவோர், தோழர் திரு. கவிஜி அவர்களை அணுகுங்கள்.....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : ஆனந்தி .ரா (23-Nov-15, 4:34 pm)
பார்வை : 264

மேலே