தீபாவளி துணிமணிகள்

எல்லோருக்கும் தீபாவளி துணிமணிகள் எடுத்துக்கொடுத்துவிட்டு
தன்னிடம் ''உங்களுக்கு எடுக்கலையா? ''என யாரும் வீட்டில் வருத்தப்பட கூடாது என்பதற்காக,

தீபாவளி முன்னிரவில் ஒரு சிறிய துண்டை[டவல்] வாங்கி
சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு வீடு திரும்புவார் விவசாயி அப்பா.

கவனித்துக்கொண்டிருந்த மகன் பின்னாளில் பெரியவனாகி
நல்ல சம்பளத்தில் அமர்ந்த பிறகு,
அப்பாவை ஜவுளிக்கடைக்கு அழைத்துசென்று, ''உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்குங்கப்பா ''என்றான்.

மகனை பெருமையுடன் பார்த்த அப்பா, சற்றே கூடிய விலையில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு ''ரொம்ப சந்தோசம் டா..இது உழைக்கும்டா
இன்னும் மூணு தீபாவளிக்கு ''என்றார்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (23-Nov-15, 10:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 234

சிறந்த கட்டுரைகள்

மேலே