பாலன் -1

சிறு வயது துறு துறு என நில்லாமல் ஓடும் வயது, ஏனோ தெரியவில்லை துறு துறு என ஓடும் வயது என்பதால் வீட்டை விட்டே வெளியே ஓடி வந்து விட்டான் இச்சிறுவன் பாலன்,

பாலன் வயிற்றில் பசி சட்டை பை காலி, பேசாமல் வீட்டிற்கே திரும்பி விடலாம் என்றால் தடுத்து நிறுத்தும் கௌரவம்,

புதிய மனிதர்கள் பல வித முகங்கள் உதவி கேட்டிட தயக்கம், யாரிடம் சென்று என்ன கேட்பது என்று பாலனுக்கு தயக்கம்,

புதிய பாதைகள் பல வித திருப்பங்கள் காணாத ஊர், அச்சத்துடன் கண்டு களிக்கும் கண்கள், என்று இவ்வாறாக பல தூரம் நடந்தே கடந்து வந்து விட்டான் இன்னும் பாலன் நின்ற பாடில்லை,

தொண்டையில் தாகம் வற்றி வறண்டு கிடக்கும் நாக்கு வலித்திடும் கால்கள், வலியும் நெஞ்சம் அச்சத்துடன் கண்கள், பசியும் வயிறு வேர்வை படியும் உடலும் என யாவும் சோர்வு கொண்டது பாலனுக்கு,

பாலன் பல ஊர் கடந்து ஏதோ ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தான்,தூரத்தில் ஒரு கிணறு தெரிந்தது,கிணற்றை எட்டி பார்த்த பாலனுக்கு சிறிதளவு மகிழ்ச்சி, காரணமாக அந்த கிணற்றில் பாதியளவு தண்ணீர் இருந்தது, பாலன் கிணற்றினுள் இறங்கினான்,, தண்ணீரிலே சிறு பாம்புகள் பூச்சிகள் மாண்டு கிடந்தது, வேறு வழியில்லை வயிறு முட்ட அந்த தண்ணீரையே குடித்து விட்டு திரும்பவும் நடக்க ஆரம்பித்தான்,

காலும், உடலும் பயங்கரமாக வலித்தது யாருக்கும் தெரியாத ஒரு மறைவான ஓரத்தில் இரு கால்களையும் நீட்டிய படி அமர்ந்தான்,

எங்கோ எப்பொழுதும் கேட்ட குரல் கண் விழித்து பார்த்தான் கண்ணில் கண்ணீர் வடித்த படி எதிரே நின்றிருந்தாள் பாலனின் தாயார்,ஓடி வந்து பாலனை கட்டி அணைத்து முத்தங்கள் பல தந்து இனி மேல் நான் உன்னை ஏதும் திட்ட மாட்டேன், தந்தையும் இனி உன்னை ஏச, அடிக்க மாட்டார், உன்னை காணாமல் தந்தை மிகவும் வருத்தமாக உள்ளார், வா வீட்டிற்கு செல்வோம் என்றாள் பாலனின் தாயார்,

தான் அமர்ந்த இடத்தில் இருந்து பதறிய படி எழுந்தான், பிறகு தான் தெரிந்தது பாலனுக்கு இது கனவென்று

தொடரும்,.,.,.,.,,

எழுதியவர் : விக்னேஷ் (25-Nov-15, 11:40 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 413

மேலே