யார் பிச்சைக்காரன்
பகல் நேரம், கண்களுக்கு நேராக டார்ச்லைட் அடித்தார் போல் அவ்வளவு வெயில்,சாலையில் குழந்தை தன் கையில் உள்ள ஐஸ்கிரீம் உருகுவதற்கு முன் அதை உண்ண வேகமாய் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.சாலை முழுவதும் ஒரே வாகனங்கள்.போக்குவரத்து நெரிசலால் மக்கள் அங்கு தங்கள் வாகனங்கள் உடன் நின்றுகொண்டிருந்தனர்.அருகில் இருந்த ஓட்டலில் அவர்களது பணிகள் மும்முரமாய் நடைப்பெற்று கொண்டிருந்தது,காலில் வெந்நீர் ஊற்றியதை போல் அங்கு வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.சுற்றுலா பூங்கா,பிசியான சாலை ஆகியவற்றிற்கு அருகே அமைந்ததால் அந்த ஓட்டலுக்கு செம மவுசு.எப்பொழுதும் அங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். பூங்காவின் உள்ளே சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்க வெளியில் இளைங்கர்கள் குமரிகளை நோட்டம் இட்டு கொண்டிருந்தனர்.அந்த பூங்காவின் அருகே இருந்த மேஜையில் நாயொன்று படுத்து கொண்டிருந்தது.
இந்த சூழலில் அந்த சாலையில் கையில் தடியுடனும்,முகத்தில் தாடியுடனும் வளைந்த முதுகுடனும் கிழிந்த ஆடையுடனும்,கையில் ஒரு பாத்திரத்தை ஏந்தி கொண்டு ஓர் பெரியவர் அவ்வழியே நடந்து கொண்டிருந்தார்.அவரது வயிர் புலி போல் உறுமியது.மிகுந்த பசி.அவர் நடந்துகொண்டிருக்க ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தையை பார்த்தார்.அக்குழந்தை ஐஸ்கிரீம் குச்சிகளை தன் வாயில் செலுத்தி அதை சிறிது கீழே சிந்தியது.இதை பார்த்த பெரியவர் எச்சிலை முழுங்க அக்குழந்தை அவரை பார்த்து சிரித்தது.இப்பெரியவரும் மெல்லிய சிரிப்பை பதிலாக கொடுத்தார்.இதற்கிடையில் ,"திவ்யா! என்ன பண்ணிட்டிருக்க?"என்று அவளது அப்பா கேட்க "அப்பா! அவரு நம்ம தாத்தா மாதிரி இருக்காரப்பா!"என்று அவள் கூறினாள்."அவனை பார்க்காதே! அவன் பிச்சைகாரன் "என்றார். "அப்பா எனக்கு ஒரு புது நோட்டு வாங்கி கொடுப்பா" என்று அக்குழந்தை கேட்க அதெல்லாம் இப்ப வாங்கி தரமுடியாது என்றார் அவர் அப்பா.அவர்கள் காரில் ஏறி சென்றனர்.
மெதுவாக அப்பெரியவர் சாலையை நோக்கி நடந்தார்.அங்கு ஒருவன் "டார்லிங் நான் கார் ஷோரூம் வெளியே நிற்கிறேன்,ஒரு லச்சத்துக்கு வண்டி எடுக்கவா இல்ல ரெண்டு லச்சத்துக்கு எடுக்கவா"என்று பேசி கொண்டிருந்தார்.அப்பொழுது இப்பெரியவர் தன் கையில் உள்ள பாத்திரத்தை நீட்டினார்."காசுலாம் இல்ல போ"என்று அவன் சொல்ல பெரியவர் மெல்லிய புன்னகையுடன் அவ்விடம் விட்டு சென்றார்.
சாலையில்,மாதம் ஆயிரம் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு காவல் அதிகாரி நூறு ருபாய்க்காக ஒரு வாகனத்தை நிறுத்திக்கொண்டிருக்க அப்பெரியவர் சாலையை கடந்து சென்றார்.அவருக்கு பசி மிகுதியாய் இருந்தது.அங்கு ஓர் காய்கறி கடை இருந்தது,அங்கு செல்வந்தன் ஒருவன் காரில் இறங்கி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தான்."என்னப்பா 150 ருபாய் சொல்ற கொஞ்சம் கம்மிப்பண்ணிக்கோ 140 ரூபாய்க்கு போடு" என்று பத்து ரூபாய்க்காக பேரம் பேசி கொண்டிருந்தான் பல லட்சம் மதிப்புள்ள காரை வைத்திருந்த அச்செல்வந்தன்.இதை பார்த்துக்கொண்டே பெரியவர் அவர்களை கடந்து ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு ஓட்டல் முதலாளி"இன்னைக்கு எவ்வளோ கலக்சன்"என்று கேட்க"நிறைய தேறும்"என்றான் வேலை செய்பவன்.இப்பெரியவர்"ஐயா!தர்மம் பண்ணுங்க!" என்று கேட்டார்."தொழில் நடத்துற இடத்துல இவன் வேற அடிச்சு துரதுங்கடா இவன"என்று சொல்ல வேலையாள் ஒருவன்"போ !போ! "என்று சொல்லி கொண்டே வந்தான்.பெரியவர்க்கு பசி மயக்கம் வந்தது.கண்ணீர் கண்களை சூழ்ந்து கொள்ள அவர் மெதுவாய் நடந்தார்.அவரது கால்கள் நிலையற்று எங்கு செல்லவேண்டும் என்று தெரியாமல் மெதுவாய் நகர்ந்தது.
கடவுள் யாரையும் கைவிடமாட்டார் என்பது இப்பெரியவருக்கு நிஜம் ஆயிற்று.நீர்நிரம்பிய கண்களில் சற்று தெளிவு ஏற்பட்டது.மெல்ல நகர்ந்த கால்கள் கோவில் வெளியே பிரசாதம் தந்துகொண்டிருந்த கரம் நோக்கி வேகமாய் சென்றது.ஒரு கப் அவர் கையில் விழுந்ததும் அந்நியர்களிடம் இருந்து மக்கள் விடுதலை பெற்றது போல் பசியில் இருந்து விடுதலை பெற்று விடலாம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.
பூங்காவின் வெளியே இருந்த மேஜையில் அமர்ந்து ஒரு கை எடுத்து தன் வாயில் போட்டுகொண்டார்.அது அவரது நாக்கில் பட்டு உணவு குழாய் வழியாய் வயிற்றிற்கு செல்வது அவராள் உணர முடிந்தது.அவர் மீண்டும் ஒரு கை எடுக்க அருகில் யாரோ சிணுங்குவது போல் அவர் உணர்ந்தார்.அருகில் நாய் ஒன்று நீர்நிரம்பிய கண்களுடன் அவரை பரிதாபமாய் பார்த்தது.அது பசியால் இருந்ததை உணர்ந்த பிச்சைக்காரன் தன் கையில் இருந்த பிரச்சாததை அந்த நாய்க்கு தந்தார்.
அது மெல்ல உண்ண பெரியவர் புன்னகைத்துக்கொண்டே கையில் பாத்திரத்தையும்,குச்சியையும் எடுத்து கொண்டு மெதுவாய் நடந்தார்.நாயின் கண்களில் அவர் கடவுளாய் தெரிந்தார்.உடனே அவரை பின்னோக்கி சென்றது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யார் பிச்சைக்காரன்???????????????????????????????????????????????
(இக்கதையினை படிப்பவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )
நன்றியுடன்,
ர.மனோஜ் குமார்.