ஊடலின்போது தவிக்கும் மனம்

மனதினுள் கணைகள் பல துளைதிருந்தும்
துளைதவற்றை எடுக்கவும் முடியாது,
, அதன் வலியை யாரிடமும் சொல்லவும் முடியாது,
தாளவே முடியாத தவிப்பினை,
மனதினுள்ளே நிறுத்தி மருகுகிறேன்...
விடையும் தெரியாமல் , வினாவும் தெரியாமல்,
கோபத்தை மட்டுமே அம்பாக விட்டால்...???
வேறொன்று கிடைக்காது..
விதி செய்த பிறவி பயன்..
யாரிடமும் பேசவும் விரும்பவில்லை,
பழகவும் விரும்பவில்லை
மேலும் மேலும் விரும்ப செயலதனை ,,
நீர் செய்தாலும்,,
சட்டென முடிவொன்றை எடுத்திட மனம் தயங்குகிறது,,
ஒவ்வொரு நொடியும் உன் குரல் கேட்கும் போது
என்னவென்றே தெரியாத ஓர் ஆனந்தம் ,
ச்னடையிட்ட வேளையிலும் ,ஏன் என
சல்லடையாய் துளைத்த கேள்விக்கு பதிலில்லை எம்மிடம்............!!!!


தெளிவான குழப்பத்துடன்,
பிரபா

எழுதியவர் : பிரபா (26-Nov-15, 12:11 pm)
பார்வை : 116

மேலே