யாரிவள்

யாரிவள். ...?
மலரை நிறுவும்
மென்முகையோ
தேவ தூதனின்
புன்னகையோ
பிரம்மனும் தடுமாறி
வீழ்ந்த குகையோ
ரம்பையின் சின்னக்
குரும்பையோ
பூமியை அழகிக்க
வந்த பொற்சரமோ
சாமிக்கு பூஜையிட
செய்த குஞ்சரமோ
கணைகள் சுரக்கும்
வெள்ளிச் சலங்கையோ
பிணையெடுக்கப்
பிறந்த பவள முத்தோ
யாரிவள். ......
குறை தகர்க்க
இல்லம் நிறைபவள்
நெஞ்சில் வரம் நகர்க்க
செல்வம் பொழிபவள்
தேவதை இல்லா வீடு
அது வெறும் வெற்றுக் கூடு. ...