தாய் வாசம்

மூழ்காமல் முழுகிக் கிடக்கும்
ஒரு தாய் வாசம்
கருவறைக் குடத்தால்
காலாற நடாத்திய
நிம்மதிக் குளியல்
சுகம் சுகம் வளர் வளர்
சுகம் சுகம் வளர் வளர்
நெற்றி பொத்தி
கண் வரை மடல் மடிய
உச்சி குளிர
உச்சி குளிரும் தாய் வாசம்
சொகுசு இருக்கை - அவள்
நகம் கிளிய
விரல் நுனி மடங்க
விரல் சுளுக்க
கணுக்கால் நசிய
முழங்கால் வலிக்க
முனகலும் இனிக்க
பன்னீராய் நனைக்கும்
பாசக் குளியல்
தப்பித் தப்பி தெறிக்கும்
தண்ணீரில்
பிரம்மனும் தோற்கும்
தாய் வாசம். ..
ஊற முன் எழும்பி
தளம்பிக் குளப்பி
உச்சி ஊதி
உதடுகள் ஒற்றி
தொப்பூழ் காய்த்து
தூபமும் போட்டு
வெற்றிக் குளியல்
தாய் வாசம்
ஜென்மங்கள் கடக்கும்
பிரம்மனும் தோற்கும்