இன்னும் காதலிக்கிறேன் நான்
என்னிடம் பிரசவித்த
முதல் வெட்கத்தையும்
முதல் முத்தத்தையும்,
முழுவதுமாய் ரசித்த
என்னை விடுத்து...
மறுமுறை அவற்றை
பிரசவிக்கும் நோக்கோடு
மணமேடையில்,
மாற்றான் ஒருவனுக்கு - தன்
மலர்கழுத்தினை நீட்டிய
அந்த மலர்விழி கொண்டவளை
இன்னமும் காதலிக்கிறேன் நான்...!