இரக்கமற்ற இரவுகள்
அன்றொரு நாள்...,
ஓட்டிற்குள் ஒடுங்கும் நத்தையாய்,
ஒரே போர்வையில்
உனக்குள் நானுமாய்,
எனக்குள் நீயுமாய்,
நம்மை புதைந்துபோக செய்த
அதே கார்கால குளிர்காற்று....
இன்று,
நீயில்லாத என்
தனிமை நிறைந்த
கருகிய இரவுகளில்,
ரம்மியமான குளிர்காற்றாய்
என் தேகம் தீண்டி
மெய்களை சிலிர்க்க வைத்து
மோகத்தை தூண்டுகிறது...!
உன்னையல்லாது
தலையணையைக் கூட
அணைக்க மறுக்கிறது
என் கைகள்..!
உன் மார்புசூட்டில்
என் முகம் புதைத்த
நிமிடங்களின் நினைவுகள்
நித்தமும் என்னை வதைக்கிறது..!
உன்னுடனான ஊடல் இன்றி
உறங்காமல் தவிக்கிறது
என் பெண்மை..!
ஆதலால்,
இரக்கமற்ற என் இரவுகளை
இனிமையாக்க
இனியவனே...!
விரைந்து நீ வருவாக...!
துயில் கொள்ளாமல் தவிக்கும்
உன் துணைவி...!