மறுத்து போகாத இதயம்

காதலியே...
உன்னில் இறந்து போனதாய்
நீ உதறிய,
நம் காதல் தான்
இன்னும் என்னை
உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது....!
எழுதப்படாமல் திருப்பப்பட்ட
என் நாட்குறிப்பின் பக்கங்களை
வண்ணமயமாக்கியவளே...!
மனம் விரும்பிய காதலை
மறக்கும் அளவிற்கு
உன்னைப்போல் இன்னும்
மறுத்து போகவில்லை
என் இதயம்...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (29-Nov-15, 3:15 pm)
பார்வை : 102

மேலே