அவனுக்கு ஓர் கடிதம் ~ செல்வமுத்தமிழ்

விழுங்க
எச்சிலின்றி
நான் விசும்புகிறேன்
நடு வீதியில்
உன்னால்
தெரு நாய்களோடும்
தேங்கியுள்ள குப்பையோடும்
நித்தம் யுத்தம் செய்கிறேன்
எச்சில் உணவுக்காய்
உன்னால்
அருவருப்பான சீண்டல்கள்
அன்றாடம்
என்
அங்கம் தொடுகின்றன
உன்னால்
கொச்சையான விழிகள்
என்
உடலை
இச்சையோடு மொய்க்கின்றன
உன்னால்
குருடாக்கி முடமாக்கி
கொத்தி இரையாக்க
கூட்டமொன்று
எனை சுத்தி திரிகிறது
உன்னால்
அவளின்
தயக்கத்திற்கும்
இவனின்
மயக்கத்திக்கும்
சிசுக்களை
சிலுவையிலேற்றும் முடிவை
மறு பரிசிலனை செய்யடா
மதிகெட்ட கடவுளே ........
--இப்படிக்கு
உன்னால் எழுதப்பட்ட
உயிர் பிழைகள் ...........