காணாமல் போன காட்டாற்று வெள்ளம்
கரைபுரண்டு கற்பாறைகளையும்
காட்டு மரங்களையும்
கடத்திக் கொண்டு
கட்டுப்பாடற்று அருவியாய்க்
கொட்டும் கொல்லிமலையின்
தேவாமிர்தமான தேனருவி
போய் சேருமிடத்தைக்
கண்டுபிடிக்க முடியவில்லை
காலம் கடந்து
கவலைப் படும்
கவனமற்ற அரசு !!
ஊருக்கெல்லாம் வெள்ளம் வர
உள்ளூர் ஏரி மட்டும்
மானாவாரி நிலம் போல்
காட்சி அளிக்கும் கோலம்
கொல்லிமலையின் அடிவாரமாம்
தூசூர் ஏரியின் அவலம் !!!
இன்னும் இதுபோல்
எத்தனையோ ஏரிகள்
நீரில்லா நீச்சல் குளங்களாக
ஆடு மாடுகளின்
மேய்ப் பிடங்களாக
காணும் காட்சிப் படங்களாக
மட்டுமே இருந்து வருகிறது !!!