மாசத்துல மூணு நாளு
வற்றாது காக்கச் சொல்லி
காவிரிக்குப் படைத்த
ப்ரம்ம
நாழிகைகளில்தான்...
வயிற்றைக் காத்தருள
வேணும் தாயி... என
கடலம்மாவைக்
கும்பிட்டெழுந்தனர்.... எம் மக்காள்.
இன்னும் சிலர்
உச்சிவெயில் கவனியாது
யமுனா நதிக்கரைகளில்
கவிதையழுதிக் கிடக்க...
நெகிழிக் குப்பைகள்
ஒதுக்கிவிட்டு
கங்கைசூழ் தீர்த்தங்களில்
புண்ணியம்
சேர்த்துக் கொண்டார்கள்..
இதுவரை பாவம்
செய்யாதிருந்த........ ஏனையோர்...!!
இவர்கள் அறியாமற்
செய்கிறார்கள் என்றுணர்ந்த
கடவுள் மட்டும்.....
கங்கா... காவிரி
கடலம்மாக்களை
மாதம் மூன்றுநாள் தள்ளிவைத்துவிட
தீர்ப்பெழுதி
அருள் பாலித்திருந்தார்.....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
